நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு, 2717 பேர் கைது

335 0

பொலிஸாரால் மேற்கொண்ட  நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கைகளில் 2717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் நேற்று (01) நள்ளிரவு முதல் இன்று (02) காலை வரை நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்கிய 13,092 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது தேடப்பட்டு வந்த 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக 1056 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது, போதைப்பொருள் வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் இரவு வேளையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றங்களை அடிப்படியாக கொண்டு மேற்படி கைதுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment