ஹம்பாந்தோட்ட ஒப்பந்தம் திருத்தங்களுக்கு தயார்-ஜனாதிபதி

210 0
ஹம்பாந்தோட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வுகள் செய்து எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் அதனை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பான நகல் பத்திரம் சகல அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதுதொடர்பான ஆய்வுகள் மற்றும் தேவையான திருத்தங்களை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் திருத்தங்களை முன் வைப்பார்கள் எனின் அது தொடர்பில் ஆராய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a comment