வெனிசுலாவில் எதிர்கட்;சிகள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு எதிர்கட்சி தலைவர்களின் பாதுகாப்பிற்கும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவே பொறுப்பு கூறவேண்டும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள வன்முறையைகளை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 120க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஜனாதிபதி மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதை மறுத்த மதுரோ, அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து கடும் அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள், அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது மூலம் பொதுத்தேர்தலை ஜனாதிபதி தள்ளிப் போடுவதாக குற்றம் சுமத்தினர்.
இந்தநிலையிலேயே எதிர்கட்சி தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.