அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்கு மூலம்  

247 0
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து, வாக்கு மூலம் அளிக்க முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க இன்று முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இதற்கு முன்னதாக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் அறிவித்திருந்தபோதும், அவர் முன்னிலையாகவில்லை.
பணியின் நிமித்தம் குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமைச்சரால் முன்னிலையாக முடியவில்லை என அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவில் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையான அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் முற்பகல் 10.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் முன்னிலையாக முடியாமல்போனமை குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றமை காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியவில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் ஏன் ஆணைக்குழுவில் முன்னிலையானர் என்பது தொடர்பில், அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியன்ஸி அர்சர்குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதாவது, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியமை, கொழும்பில் மாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்க சென்றமை மற்றும் அதில், வீடொன்றை விலைக்கு வாங்கியமை தொடர்பில் அமைச்சர் சாட்சியமளிக்க முன்னிலையானதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

Leave a comment