மட்டக்களப்பில் உந்துருளியொன்று மாடு ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில், உந்துருளியில் சென்றவர் உயிரிழந்ததுடன், குறித்த மாடும் உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு விதியின் பிள்ளையாரடி பகுதியில் நேற்றிரவு இந்த அனர்த்தம் நேர்ந்ததாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியை செலுத்திச் சென்ற கிரான் கும்புறுமூலை வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.