திருகோணமலை – நிலாவெளி – நெடுங்கேணி வனப்பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன காவல்துறை விசேட படைப்பிரிவால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
40 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 08, ரி-56 ரக மெகஸின் 08 மற்றும் ரி-56 எல்.எம்.ஜூ ரக துப்பாக்கியின் சில உதிரிப்பாகங்கள் என்பன இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை விசேட படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொள்கலன் ஒன்றில் வைத்து மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவை, புலிகள் அமைப்பால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.