அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர உட்பட 5 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்து, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.