வானூர்தி நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மரணம்

233 0
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பயணி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக  வானூர்தி நிலைய சுகாதார மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சவூதி  அரேபியாவிலிருந்து இன்று அதிகாலை 4.20 அளவில் இலங்கை வந்த பயணியே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment