அரசாங்கத்தை விமர்சிக்கும் அளவு நாட்டில் சுதந்திரம் – பிரதமர்

231 0
அரசாங்கத்தை விமர்சிக்கும் அளவிற்கு நாட்டின் சுதந்திரம் நிலைமை கட்டியெழுப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் பேரவையில் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் கட்ட இளைஞர் சேவை கொடி அணிவிப்பு, அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதன் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்காக பாரிய நிதி ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள கடன்சுமையை குறைப்பதற்கே அதிகளவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டளவில் நாட்டின் கடன் அடைக்கப்பட்டுவிடும்.
2025ஆம் ஆண்டளவில் இளைஞர்களுக்கு கடன் என்ற பிரச்சினையே காணப்படாது.
அத்துடன் நாட்டு மக்களும் அபிவிருத்தி அடைந்த நிலையில் காணப்படுவார்கள் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment