கண்டி – ரங்கல – போபிட்டிய மைதானத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மோதலின் போது ஒருவர் கொல்லப்பட்டார்.
மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் கோமர தோட்டதைச் சேர்ந்த 26 வயதுடைய தமிழ் இளைஞர் என்று ரங்கல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுப் போட்டி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முறுகலே பின்னர் கைகலப்பாக மாறியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை – மகியங்கனை வீதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்த விசாரணைகளை பதுளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.