காணாமல் போனோர் அலுவலகத்துக்கான அதிகாரிகளை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை எப்போது ஒன்று கூடும் என்பதை சபாநாயகரே தீர்மானிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்படவேண்டும் என்பதோடு, அவர்கள் சர்வதேச சட்டத்திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் முன்னனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.