கணக்காய்வு சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம்

233 0

தேசிய கணக்காய்வு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அண்மையில் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டதும், அந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment