முறையற்ற விதத்தில் குப்பை கொட்டிய 268 பேருக்கு சிக்கல்

264 0

முறையற்ற விதத்தில் குப்பை கொட்டியவர்கள் தொடர்பில் மேல் மாகாணத்தில் இரு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 268 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 28 மற்றும் 29ம் திகதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்திருந்ததாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பின் வடக்கு, மத்தி, தெற்கு, நுகேகொடை, கல்கிசை, கம்பஹா, களனி மற்றும் நீர் கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment