அரிசிப் பற்றாக்குறை ஏற்படாது: கோதுமை மாவுக்கு வரி குறைப்பு!

248 0

நாட்டினுள் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக தற்போது 25 சதம் மட்டுமே வரியாக அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோவை 75 ரூபாவுக்கும், பொன்னி சம்பா ஒரு கிலோ கிராம் 72 – 75 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, கோதுமை விதைக்கான இறக்குமதி வரி 9 ரூபாவில் இருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய மஹிந்த அமரவீர, கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment