கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை (eastern terminal) எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பகுதி எந்தவொரு தரப்பிற்கும் விற்கவோ குத்தகைக்கு விடப்படவோ மாட்டது என, அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக வௌியான செய்திகளில் உண்மையில்லை என, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ளார்.