மன்னார் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவரின் படகு இந்தியாவில் கைப்பற்றல்

261 0

மன்னார் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவரின் படகு ஒன்று நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் புதுச்சேரிப் பிரதேசத்தில் வைத்து கரையோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டே தற்போது புதுச்சேரியில் குறித்த படகு கைப்பற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன. மன்னார் மாவட்டத்தின் எம்.என்.ஆர்.2937 என இலக்கம் இடப்பட்ட சிறிய நார் இழைப் படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகு மன்னார் பேசாலையை சேர்ந்த சரத் – அருள்நேசன் என்பவரது பெயரில் பதிவிடப்பட்டதாக தற்போது மன்னாரில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படகினை மன்னார்ப் பிரதேசத்தில் இருந்து கடந்த 3 தினங்களாக காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment