பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

297 0
பருத்தித்துறை  பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த வடமராட்சி  பகுதி மக்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சமுர்த்தி மீளாய்வின் போது தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தாம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாகவும் தமக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள்  தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர். பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ. சிறீல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய ரீதியில் சமுர்த்தி மீளாய்வு இடம்பெற்று சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment