யாழில் திருட்டு முயற்சி முறியடிப்பு

296 0
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் இரவு 7.30 மணியளவில் உள்நுழைந்த இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முதியவரின் சாதுரியத்தால்  முறியடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் இரு இளைஞர்கள்  இரவு 7.30 மணியளவில் சாதுரியமாக  உள்நுழைந்த இரு இளைஞர்களால் அங்கிருந்த முதியவரின் சட்டைப் பாக்கற்றில் இருந்த பணத்தை திருட  மேற்கொள்ளப்பட்ட முயற்சி முதியவரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டது. குறித்த முதியவர் எதிர்பாராத நேரம் திடிரென உள்நுழைந்த இளைஞர்கள் முதியவரின் கழுத்தை பிடித்தவாறு சட்டைப் பையில் இருந்த பணப்பையை எடுக்க முனைந்துள்ளனர்.
குறித்த சமயம் நிலமையை உணர்ந்த முதியவர் சுதாகரித்து இளைஞனை நிலத்தில் வீழ்த்தி மடக்க முயன்ற சமயம் இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பியோடிய இளைஞர்களை இளைஞர் ஒருவர் துரத்திச் சென்ற சமயம் தப்பியோடிய இளைஞர்கள் கத்தியை காட்டி அச்சிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து குறித்த விடயம் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment