கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கிறது? – ஆராய குழு நியமித்தார் ஜனாதிபதி 

237 0

பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள் மூலம் கடந்த நாட்களில் கைப்பற்ற போதைப் பொருட்களுக்கு என்ன நடந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை சந்திப்பிலேயே ஜனாதிபதி இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், இவ்வாறு கைப்பற்றப்படும் பாரியளவிலான போதைப்பொருட்களை என்ன செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வுகள் அல்லது முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அதுபோல் கடந்த ஆட்சியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் அபிப்ராயங்களை தெரிவிக்க முடியாது எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பில் ஆரய்வதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுத்தருமாரு ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பட்டார்.

குறித்த விடயத்திற்காக அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, விஜயதாச ராஜபக்ஸ, சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a comment