ஹம்பாந்தோட்ட துறைமுகமே வாகன விலை அதிகரிப்புக்கு காரணம் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

258 0

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் வாகனங்கள் இறக்கும் செயற்பாடு நிறுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள் இறக்கப்பட்டது.

எனினும் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் கப்பல்கள் இல்லாத காரணத்தினாலேயே கொழும்பிற்கு வந்த கப்பல்கள் அங்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் காரணமாகவே வாகனங்களின் விலை அதிகரித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நட்டத்தை நுகர்வோரே அனுபவிப்பதாகவும் இதன்காரணமாகவே தாம் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் வாகனங்களை இறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை துறைமுக பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையானது 57 இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு பாரிய நிதியினை சேமிக்க முடியும் என்றும், இதன் இலாபங்கள் துறைமுக பணியாளர்களுக்கே பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment