இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீன மடிக்கணினிகள்

299 0

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற அலுவலக வேலைகளின் பயன்பாட்டிற்காக சீன அரசு மடிக்கணினிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, சீன அரசு 265 மடிக்கணினிகளை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த மடிக்கணினி ஒன்றின் பெறுமதி 1,40,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட நாடாளுமன்ற அலுவல்களின் போது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களுக்கு முன்பாக இதை இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான இணைய வசதி, மற்றும் வைபை வசதிகளும் பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இனிவரும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து ஆவணங்களும் இருவட்டு மூலம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கை  பூர்த்தியினை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment