இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறியது.
இறுதிபோட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
இருப்பினும் இந்திய மகளிர் அணியினருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய வீராங்கனைகளுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பல பரிசுகளை வழங்கி வருகின்றன.
இந்திய அணியின் தலைவி மிதாலிராஜ் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற ஓட்டங்களுடன் சேர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
இந்த சாதனைக்காக தெலுங்கானா பேட்மிண்டன் கழகம் சார்பில் அவருக்கு ஒரு பி.எம்.டபுள்யூ. கார் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா பேட்மிண்டன் கழக துணை தலைவரான
வி.சாமுண்டேஸ்வரிநாத், மிதாலி ராஜிக்கு காரை பரிசாக வழங்கினார்.