சொத்து குவிப்பு வழக்கு – சசிகலாவின் மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு 

263 0

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மீளாய்வு மனு தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
இதில் உடனே முடிவு தெரிய வாய்ப்பு உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றத்தினால் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், ஏனைய 3 பேருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சசிகலா உள்ளிட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மீளாய்வு மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றது.

விசாரணை நிறைவு பெற்ற உடனே இன்று மாலை உயர்நீதிமன்ற  பதிவாளர் இந்த விசாரணை மீதான முடிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment