உயிரை கொடுக்கவும் தயார் ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் துணை போகமாட்டேன் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கடந்த 48 நாட்களாக காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என் உயிரை கொடுக்கவும் தயார், எனினும் மாநில பிரிவதற்கு துணை போகமாட்டேன் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.