வெனிசுலாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது

249 0

வெனிசுலாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெனிசூலாவில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது.

கடந்த 2013இல் அப்போதைய ஜனாதிபதி சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அவரது அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் கிளர்ச்சி ஏற்பட்டது.
இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 120க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஜனாதிபதி மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை மறுத்த மதுரோ, அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து கடும் அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள், அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது மூலம் பொதுத்தேர்தலை ஜனாதிபதி தள்ளிப் போடுகிறார் என்று குற்றம் சாட்டின.

Leave a comment