யாழிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது, யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக பேசப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.