வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று தாங்கள் கோரவில்லை என அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ரெக்ஷ் தில்லர்சன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா மேற்கொண்டு வருகின்ற அணுவாயுத சோதனைகளால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தீவிர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா வடகொரியாவின் எதிரியில்லை.
அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ, அரசாங்கத்தை குழப்பவோ, வடதென் கொரியாக்களை விரைவாக இணைக்கவோ அழுத்தம் கொடுக்கவில்லை.
அத்துடன் வடகொரியாவுக்கு அமெரிக்கா அச்சுறுத்தலான நாடும் இல்லை.
ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத அச்சுறுத்தலை வடகொரியா அமெரிக்காவிற்கு எதிராக ஏற்படுத்த வேண்டாம் என்றே தாங்கள் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.