மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

256 0

இலங்கையில் தற்போது காலநிலை நீடிக்கின்றது.
இந்த நிலையில், வறட்சியான காலநிலையின் மத்தியில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவோ அல்லது மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவோபட மாட்டாது என மின்சக்தி எரி சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வறட்சியான காலநிலையால் மின்பாவனை 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
ஆனால் நீர்மின்னுற்பத்தி 37 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் நாட்டின் பிரதான மின்னுற்பத்தி நிலையமாக கருதப்படுகின்ற நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகளால், அங்கிருந்து கிடைக்கும் 300 மெகா வோல்ட் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மக்களுக்கு இடையூறு இல்லாத மின்வழங்கலை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மின்சக்தி எரிசக்திவலு பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா, மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பகல்பொழுதில் அவ்வப்போது மின்சார துண்டிப்பு ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment