மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ‘சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சி’ பிரகடனப்படுத்தியுள்ள தேசிய எதிர்ப்பு தினம் இன்றாகும்.
நாடளாவிய ரீதியாக இடம்பெறும் வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
கடந்த 25ஆம் திகதி அந்த அமைப்பு கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் நடத்திய பொதுக்கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அதன்பொருட்டு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் தேசிய எதிர்ப்பு தின அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டியில் ஆரம்பித்த பேரணி நேற்று கேகாலை – நெலும்தெனிய நகரை வந்தடைந்தது.
இன்றைய தினம் மீண்டும் தொடரும் அந்த பேரணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.