அரச நிறுவனமொன்றின் பிரதானியின் மகள் ஒருவர் நேற்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 200 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பெறுமதி 25 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர், 25 வயதான மாலபே பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவருடன் மேலும் ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி திருமணமாகாதவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபருடன் மாலபேயில் அமைந்துள்ள சொகுசு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சொகுசு வாகனம் ஒன்றில் போதைப்பொருளை கொண்டு சென்ற போதே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும் கைது செய்யப்படும் போது, அந்த யுவதி அழுது புலம்பியதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் சில காலம் டுபாயில் வாழ்ந்து வந்த நிலையில், அக்காலப்பகுதியில் இலங்கைக்கு அவர்கள் போதைப்பொருளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.