விசேட சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல்

3561 0

யாழ் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விடயங்களை சீர்செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றவருகின்ற குற்றச்செயல்கள் பொலிசார் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ் மா அதிபர் பூஜித’ ஜெயசுந்தர தலைமையில் யாழ் பிராந்திய பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது.

நாட்டில் அமைதி இல்லை சமாதானம் இல்லை சட்டம் ஒழுங்கு சீராகஇல்லை என வெளி உலகிற்கு காட்டுவதை இலக்காக கொண்டு சில சிறய குழுக்கள் இயங்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருவதாகவும் அவர்களின் எண்ணம் ஈடேற தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இங்கு உரையாற்றிய போது தெரிவித்தார்.
குற்றச்செயல்களை குறைப்பதற்கு முதற்கட்டமாக ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இவ்விடயத்தில் இராணுவத்தினர் கடற்படையினர் வான்படையினர் மற்றும் விசேட அதிரப்படையினரையும் இணைத்து செயற்படவுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை தாம் இவ்விடயத்தில் எதிர் பார்ப்பதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் குற்றச்செயல்கள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த தாம் அறிந்த தகவல்களை பொலிசாருக்கு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது யாழ் மவாட்ட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதலையும் பொலிஸ் மா அதிபர் வழங்கி வைத்தார்.
வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ யாழ் மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சி மூப்படைகளின் அதிகாரிகள் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்

Leave a comment