எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருவதாக சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற மசகு எண்ணெய்சார் தொழிற்சங்க ஊழியர் தொழிற்சங்க போராட்டத்தினால் தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது.
எரிபொருள் தொகை களஞ்சிய பிரிவின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவசியமான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக மசகு எண்ணெய் சார் தொழிற்சங்க ஊழியர்கள் வழங்கப்பட்ட வாக்குறுதியொன்றுக்கு அமைய குறித்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.