பாராளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மாத்திரமே நிலைத்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குடும்ப ஆதிக்கத்தை விதைத்து , ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். இவர்கள் தற்போது 113 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் அதிகார்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதியின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதை அவர்கள் வேண்டும் எனலுவும் குறிப்பிட்டார்.
ஹிங்குராங்கொட வலய கல்வி அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் நேற்று திங்கட்கிழமை கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
பாராளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கனவு கண்டாலும் அதற்கு எனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்றபின்னர் அரசாங்கம் கவிழ்ந்து ஜனாதிபதியை அப்புறப்படுத்தி முடித்து விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் ஜனாதிபதியின் ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது.
நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வெற்றுகோஷமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக பொத மக்களை திசைத்திருப்புவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
நாட்டிற்காக சிறந்த விடயங்களை முன்னெடுத்து அவற்றில் ஈடுபடுடன் செயற்படுபவர்கள் இருக்கையில் , வெற்று கோஷமிட்டு குழப்பத்தில் ஈடுப்படுபவர்களுக்கு சில ஊடகங்களில் இன்று சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலும் சிலருக்கு போய் சேர்ந்து விடுகின்றது.
ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்தனர். ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நாட்டின் நாட்டின் நற்பெயரை சிதைத்தது மாத்திரமன்றி தவறான பாதைக்கும் இட்டுச்சென்றனர். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் அக்கறையுடன் செயற்படுகின்றேன். எனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை . பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்றார். .