அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆகஸ்ட் 4ஆம் திகதி மூடப்படவுள்ளன.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் நான்காம் திகதி மூடப்படுகின்ற பாடசாலைகள் செப்டெம்பர் 6 ஆம் திகதி திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.