கோப்பாய் தாக்குதல் – இருவர் கைது

262 0
கோப்பாய் காவல்துறை மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலையில் கோப்பாய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 மற்றும் 23 வயதான இவர்கள் நல்லூர் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களை சேர்;ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்பாணம் கோப்பாய் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 2 அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலை நடத்தியவர்களில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளும் இருப்பதாக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நேற்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment