அமெரிக்காவைச் சேர்ந்த புலிட்சர் விருது வென்ற புகழ்பெற்ற நாடகம் மற்றும் சினிமா கலைஞர் சாம் ஷோபார்ட் தமது 73வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் இல்லினியஸ் மாகாணத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவரான சாம் ஷேபார்ட் சிறந்த நாடக கலைஞராக இருந்தவர்.
நடிகராக இயக்குநராக கதையாசிரியராக மற்றும் வசன கர்தாவாக என பண்முகத்தன்மை கொண்டிருந்த ஷேபார்ட் 1979ஆம் ஆண்டு தன்னுடைய நாடகங்களுக்காக புலிட்சர் விருதை வென்றுள்ளார்.
அத்துடன் ஆஸ்கார் விருதுக்கும் ஒரு முறை சாம் ஷோபார்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் உடல்நலம் குன்றிய நிலையில் சாம் ஷோபார்ட் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.