பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக ஆளும் முஸ்லீம் லீக் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஷாகித்ககான் அப்பாஸி மீது 22000 கோடி ஊழல் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா காகிதம் மூலம் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமனறம் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் பதவி விலகினார்.
இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர்இ ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால் இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்தது.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த அப்பாஸி மீது சட்டவிரோதமாக இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களை வழங்கியதாக அந்தநாட்டின் தணிக்கை துறை முறைப்பாடு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.