காபூலில் தற்கொலை தாக்குதல் – ஐ.எஸ் பொறுப்பேற்பு

440 0

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு முன்பாக  நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய மூவர் தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, ஆப்கான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு  இடையில் கடும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் இன் இணையத்தளத்தில் வெளியான தகவல்களின் படி, தூதரகத்தின் முன்பாக இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாவும் மேலும் இருவர் தூதரக வளாகத்தினுள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment