கடந்த சில தினங்களாக இந்தியாவின் கிழக்கு பகுதியில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அசாம், குஜராத், ஒடிசா, அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையால் அதிகமாக பாதிப்படைந்துள்ளதோடு, வெள்ளத்தினால் வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், நிவாரணங்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு பணியினர் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.