மீண்டும் களத்தில் தினகரன் –  கைது செய்ய தயார் நிலையில் காவல்துறை

267 0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளதால் அ.தி.மு.கவில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாக எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கும் தினகரன், திகார் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பின்னர் இது வரையில் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தினை அடைய முடியவில்லை.

இந்த நிலையில், சசிகலாவின் தம்பி திவாகரனுடன் கைகோர்த்துள்ள தினகரன், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கடுத்து என்ன நடக்கின்றது எனப் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த திகதியில் தினகரன் அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தினை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தினகரன் தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்தால், அவரைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment