பேரறிவாளனுக்கு பிணை வழங்க முடியும் – சி.வி சண்முகம்

263 0

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பிணையில் விடுவிப்பது தொடர்பில் விரைவில் அறிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனின் பிணை தொடர்பில் தமிழக உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது எனவும் சண்முகம் கூறியுள்ளார்.

இதேவேளை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு பிணை கொடுக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பில் விரைவில் நடிவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Leave a comment