அபிவிருத்தி பரந்து பட்டதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி 

262 0

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அந்த காலப்பகுதியில் இருந்து தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேச அபிவிருத்தியில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெலிகந்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை மையப்படுத்தி அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் எத்தகைய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

அவ்வாறால்லாமல் தற்போது நகர் புறங்களிலும் கிராம பகுதிகளிலும் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அவர்களின் நிலையான அபிவிருத்திகாக திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

Leave a comment