உமா ஓயா திட்டம் – நோர்வே நிபுணர்களே தீர்மானிப்பர்

266 0

நோர்வேயில் இருந்து வரும் விசேட நிபுணர்களின் ஆராய்ச்சி அறிக்கைகளின் தரவுகளின் அடிப்படையில் உமாஓயா திட்டம் குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

உமாஓயா குறித்த மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள விசேட நிபுணர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், குறித்த வேலைத்திட்டத்தை தொடர்வதா? அல்லது இடைநிறுத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் திறந்தமனத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், உமாஓயா திட்டத்திற்கு எதிரான குழு நேற்றைய தினம் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சு நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment