அமைச்சர் ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை – அரசாங்கம் உறுதி

420 0

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் பட்சத்தில் அதனை ஐக்கிய தேசிய கட்சி தோற்கடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுவான சட்டம் ஒன்று உள்ளது.

அந்த சட்டத்தின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அமைச்சர் ரவி கருணாநாயக்க விடயத்திலும் அந்தகைய நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment