ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட தொகையில் அமெரிக்க டொலர் மில்லியனை தொல்பொருள் திணைக்களத்திற்கு அன்பளிப்பு செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் தொல்பொருட்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.