சிம் அட்டை பெற்றுக் கொள்ள அனுமதி கோருகிறார் அர்ஜுன் அலோசியஸ் 

560 0

தமது கைதொலைப்பேசியை பிணை விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கையளித்துள்ள நிலையில், அதே இலக்கத்தில் மற்றுமொரு சிம் அட்டையைப் பெற்றுக் கொள்ள அர்ஜுன் அலோசியஸ் நேற்று அனுமதி கோரி இருந்தார்.

அவரது சட்டத்தரணி ஊடாக ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், விசாரணை ஆணைக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இந்த விசாரணைகளில் அர்ஜுன் அலோசியஸ் ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகின்ற நிலையிலேயே இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அவர் தமது கைதொலைப்பேசியின் அப்பள் ஐடியினர் கடவுச் சொல்லை வழங்கி இருந்தால், 48 மணி நேரத்துக்குள் கைப்பேசியை திருப்பி வழங்கி இருக்க முடியும் என்றும், எனினும் தாம் அதனை மறந்துவிட்டதாக கூறுவதை மன்னிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment