பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டுமென பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஷேரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg ) தெரிவித்துள்ளார்.
தொழில் துறைகளில் பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கும் கொள்கைகள் கிரமமாக வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் பால் நிலை அடிப்படையிலான தெரிவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ம் ஆண்டு தம் கணவரை இழந்த போது சிறிய பிள்ளைகளுடன் தாம் பட்ட அவஸ்தைகள், துன்பங்களுக்கு அளவே கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் பெண் பணியாளர்களுக்கு இடையில் சம்பள இடைவெளியை குறைப்பதற்கு காத்திரமான ஓர் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களின் அளவிற்கே பெண்களும் தொழில் வாய்ப்புக்களுக்காக விண்ணப்பம் செய்வதாகவும், தொழில்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆண் பணியாளர்களுடன் ஒப்பீடு செய்யும் போது பெண் பணியாளர்கள் அதிகளவில் சம்பளம் ஈட்டுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.