புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின்பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும், காவல்துறையினருமான ஸ்ரீகஜன் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த காவல்துறைமாஅதிபர் பூஜித ஜெயசுந்தர இறுதியில் ஊடகவியலாளரைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின்வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாகிக்கிச் சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினா