காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்கள் நாளை அனுப்பிவைக்கப்படும் – மனோகணேசன்!

22090 0

காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமல் போனோரின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை உங்கள் அனைவருக்கும் குறித்த விபரங்கள் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துnhகாண்டனர்.

Leave a comment