காய்ச்சலால் முன்னாள் போராளியொருவர் மரணம்!

542 0

காய்ச்சல் காரணமாக முன்னாள் போராளியொருவர் நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த இராசரத்தினம் ஸ்ரீபவன் என்ற இளம் குடும்பஸ்தவரே உயிரிழந்தவராவார்.

கடந்த மாதம் 29ஆம் நாள் காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

14நாட்களாக தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இம் மாதம் 14ஆம் நாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உடல் நிலை மோசமாகியதுடன், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Leave a comment